செக்மேட் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்திற்கு இந்தியாவை அழைக்க ரஷ்யாதிட்டம்

ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியில் கலந்து கொள்ளும் ரஷ்ய பிரதிநிதிகள் ஐந்தாம் தலைமுறை விமானங்களை, குறிப்பாக செக்மேட் விமானத் தயாரிப்பில் இந்தியாவுடன் சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமானக் கண்காட்சி பிப்ரவரி 13-17 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

செக்மேட் இலகுரக ஐந்தாம் தலைமுறை போர்விமானம் ஆகும்.புதிய ஒற்றை எஞ்சின் போர் விமானம் Stealth தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

போர் விமானம் ஏழு டன்களுக்கு மேல் ஆயுதங்கள் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மற்றும் ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

செக்மேட் விமானம் மாக் 1.8 (ஒலியின் வேகத்தை விட 1.8 மடங்கு) வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது மற்றும் 3,000 கி.மீ வரை செல்லக்கூடியது.