இந்தியாவுடன் இணைந்து நீர்மூழ்கி தயாரிக்க ரெடி- இரஷ்யா அறிவிப்பு
1 min read

இந்தியாவுடன் இணைந்து நீர்மூழ்கி தயாரிக்க ரெடி- இரஷ்யா அறிவிப்பு

அமுர்-1650 டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க ரஷ்யா முன்வந்துள்ளது.

இந்திய கடற்படையின் திட்டம்-75 (I) திட்டத்தின் கீழ், நீர்மூழ்கிக் கப்பலின் உள்நாட்டு தயாரிப்பை 70-80% ஆக அதிகரிக்கலாம் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.அதாவது கட்டப்படும் நீர்மூழ்கி 80% வரை இந்தியத் தயாரிப்பாக இருக்கும்.

இதில் இந்திய அல்லது ரஷ்ய தயாரிப்பு #AIP இருக்கலாம். அமுர்-1650 ரக நீர்மூழ்கிக்கான ஏஐபியை கூட்டாக உருவாக்க ரஷ்யா முன்வந்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலானது 300 mt (984 ft) வரை ஆழம் செல்லக்கூடியது.22 நாட் வரை வேகம், 45 நாட்கள் தாங்கும் திறன் கொண்டது மற்றும் 35 பேர் கொண்ட குழுவினர் இதை இயக்கலாம்.