பிப்ரவரி 3 அன்று, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரேனிய இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கிய NASAMS வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துள்ளதாக கூறியுள்ளது.
“ஒரு Tochka-U தந்திரோபாய ஏவுகணை மற்றும் நோர்வே தயாரித்த NASAMS விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு அழிக்கப்பட்டது,” என இரஷ்யா கூறியுள்ளது
நேட்டோ நாடுகளிடம் இருந்து உக்ரைன் தொடர்ந்து அதிக அளவிலான உதவிகளைப் பெற்று வருவதால், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளன.
உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கியதற்காக இரஷ்யா மேற்கு நாடுகளை அடிக்கடி கண்டிப்பதுடன், இந்த நடவடிக்கை “நெருப்புடன் விளையாடுவதற்கு” ஒப்பானது என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.