இந்தியாவை விமானம் வாங்க ஈர்க்கும் விதமாக தளர்வுகள் அறிவித்த ரஷ்யா !!
1 min read

இந்தியாவை விமானம் வாங்க ஈர்க்கும் விதமாக தளர்வுகள் அறிவித்த ரஷ்யா !!

கடந்த 2009 காலகட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து MTA – Medium Transport Aircraft அதாவது நடுத்தர போக்குவரத்து விமானம் ஒன்றை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் என்ஜின் விவகாரத்தில் ரஷ்யாவின் அடாவடி காரணமாக 2016ஆம் ஆண்டு இந்தியா அந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது.

அதாவது இந்திய தரப்பில் ஒரு மேற்கத்திய என்ஜின் எங்களுக்கு தேவை உங்களுக்கு ரஷ்ய என்ஜினை வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்த போது அதற்கு ஒருகூட்டு தயாரிப்பு பங்குதாரர் எனும் பாராமல் முடியாது என ரஷ்யா அடாவடி செய்ததை தொடர்ந்து நாம் வெளியேறினோம்.

இந்தியாவும் ரஷ்யாவும் தலா 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில் பின்னர் ரஷ்யாவின் UAC United Aircraft Corporation இந்த திட்டத்தில் ஈடுபட்டு வந்தது, இந்த ஆண்டு முதலாவது சோதனை ஒட்டம் நடைபெற உள்ளது 2026ஆம் ஆண்டு இது படையில் இணைய உள்ளது.

இப்படியான நிலையில் இந்திய விமானப்படை தனது பழைய Antonov An-32 விமானங்களை மாற்றிவிட்டு புதிய நடுத்தர போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக உலகளாவிய ரீதியில் பல்வேறு நிறுவனங்களின் RFI Request For Information எனப்படும் தகவல் அறிக்கை கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் Aero India கண்காட்சிக்கு வந்திருந்த ரஷ்யாவின் UAC நிறுவன அதிகாரிகள் இந்தியாவுக்கு தேவையான தளர்வுகளை குறிப்பாக என்ஜின் விஷயத்திலும் இதர தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் விஷயத்திலும் அளிக்க உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.