கத்தார் சிறையில் உள்ள முன்னாள் இந்திய கடற்படையினரின் பெயில் மனு 7ஆவது முறையாக நிராகரிப்பு !!

ஏழு மாதங்கள் முன்பு கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தனியார் கடற்படை பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் கத்தார் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் உளவு பார்த்ததாக பொது வெளியில் தகவல் பரவியது ஆனால் அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அதில் இத்தகைய குற்றம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் தொடர்ந்து இவர்களின் பெயில் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

இந்திய அரசு வீரர்களின் குடும்பத்தினர், கத்தார் அரசு மற்றும் கத்தார் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அரசாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்

அதே போல் மேற்குறிப்பிட்ட நிறுவனம் குடும்பத்தினர் விரும்பும் பட்சத்தில் அவர்களை கத்தார் கொண்டு வீரர்களை சந்திக்க வைப்பதாகவும் இப்போது வரை சம்பளத்தை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.