விரைவில் இந்திய போர் விமானிகளுக்கு சுதேசி தலை கவசங்கள் !!

  • Tamil Defense
  • February 22, 2023
  • Comments Off on விரைவில் இந்திய போர் விமானிகளுக்கு சுதேசி தலை கவசங்கள் !!

இந்திய விமானப்படையின் போர் விமானிகளுக்கு விரைவில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தலை கவசங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரத்தில் இருந்த இயங்கும் MKU நிறுவனம் BAE Hawk 132 மற்றும் SEPECAT Jaguar போன்ற விமானங்களுக்கு ஒரு தலை கவசத்தையும், Su- 30 MKI மற்றும் Mig – 29 விமானங்களுக்கு பொதுவாக ஒரு தலை கவசத்தையும் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தலை கவசங்களை வடிவமைத்தது DEBEL எனப்படும் இந்திய அரசு நிறுவனமாகும் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் MKU இவற்றை லக்னோ பாதுகாப்பு தொழிற்சாலை வழிதடத்தில் தயாரித்து இந்திய விமானப்படைக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MKU நிறுவனம் ஏற்கனவே இந்திய முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகள் மற்றும் பன்னாட்டு படைகளுக்கு தலை கவசங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை தயாரித்து வழங்கிய அனுபவம் மிக்க நிறுவனம், அதே நேரத்தில் சொந்தமாகவே போர் விமானிகளுக்கான அதிநவீன தலை கவசங்களை உருவாக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.