காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் ரிசர்வ் மீது தாக்குதல் நடத்துவோம்- பயங்கரவாதிகள் மிரட்டல்
1 min read

காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் ரிசர்வ் மீது தாக்குதல் நடத்துவோம்- பயங்கரவாதிகள் மிரட்டல்

காஷ்மீரில் சமீபத்தில் சிறந்த தரத்திலான பெருமளவிலான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய தாதுவான இந்த லித்தியத்தை பொருத்த வரை இந்தியா 100 சதவீதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது.

காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் சலால் என்ற கிராமப்பகுதியில் இந்த லித்தியம் படிவுகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அங்கு சுமார் 60 லட்சம் டன் லித்தியம் படிவு புதையுண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த லித்தியம் ரிசர்வ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் மிரட்டலை விடுத்துள்ளனர்.

எந்த இந்திய நிறுவனம் லித்தியம் எடுக்க முயன்றாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவதிகள் கூறியுள்ளனர்.