தேஜாஸ் விமானத்தில் இனி சுதேசி MRF டயர்கள் !!
1 min read

தேஜாஸ் விமானத்தில் இனி சுதேசி MRF டயர்கள் !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்து வடிவமைத்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Dunlop டன்லப் நிறுவன டயர்கள் தான் பயன்படுத்தி வரப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த போக்கை மாற்றும் விதமாக இந்தியாவின் முன்னனி டயர் தயாரிப்பு நிறுவனமான MRF போர் விமானங்களுக்கான AeroMuscle ரக டயர்களை தயாரித்து ஏரோ இந்தியா கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளது.

தற்போது இவற்றின் சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் சோதனை முடிவு பெற்று தேஜாஸ் மார்க் 1 மற்றும் மார்க் 1ஏ ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

மேலும் MRF நிறுவனமானது தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்திற்காக பிரத்தியேகமாக சற்றே பெரிய டயர்களை தயாரித்துள்ளது ஆகவே இனி எதிர்காலத்தில் அனைத்து இந்திய விமானங்களில் இந்திய டயர்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.