டெசர்ட் பிளாக் பயிற்சியில் பங்கேற்க UAE சென்ற தேஜஸ் விமானங்கள்
1 min read

டெசர்ட் பிளாக் பயிற்சியில் பங்கேற்க UAE சென்ற தேஜஸ் விமானங்கள்

ExDesertFlag என்ற  பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படை குழு ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் சென்றுள்ளது.இந்த பயிற்சி பிப்ரவரி 27ல் தொடங்கி மார்ச் 17 வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் ஐந்து தேஜஸ் விமானங்கள் மற்றும் இரு C-17 விமானங்கள் கலந்து கொள்கின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட LCA தேஜாஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை நாட்டிற்கு வெளியே பயிற்சிக்காக அனுப்புவது இதுவே முதல் முறை.

Exercise Desert Flag என்பது பலதரப்பு விமானப் பயிற்சியாகும், இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், குவைத், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பஹ்ரைன், மொராக்கோ, ஸ்பெயின், கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் பங்கேற்கும்.

இந்தப் பயிற்சியின் நோக்கம், பல்வேறு போர் விமானங்களில் பங்கேற்பது மற்றும் பல்வேறு விமானப் படைகளின் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வது ஆகும்.