தென் சீனக் கடல் மோதலுக்கு மத்தியில் இந்தோனேசியாவில் இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டது.ஒரு இந்திய நீர்மூழ்கிக் கப்பல், முதன்முறையாக, இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவுடன் கடல்சார் தகராறில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இந்தேனேசியாவும் ஒன்றாகும்.
3,000 டன் எடையுள்ள டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துகேசரி, புதன்கிழமை சுந்தா ஜலசந்தி வழியாகச் சென்ற பிறகு ஜகார்த்தாவை அடைந்தது.
இந்திய போர்க்கப்பல்கள் அடிக்கடி அங்கு பயணிக்கின்றன என்றாலும் நீர்மூழ்கி அங்கு நிறுத்தப்படுவது இது முதல் முறையாகும்.