மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான படிப்பினையை துவங்க உள்ள இந்திய கடற்படை !!
1 min read

மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான படிப்பினையை துவங்க உள்ள இந்திய கடற்படை !!

இந்திய கடற்படை தற்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான ஒப்புதலை பெறுவது ஏறத்தாழ உறுதியாகி ஆகியுள்ள நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தேறி உள்ளது எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தி உள்ளது.

அதாவது இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ஊடகங்களிடையே பேசும்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான ஆய்வு அல்லது படிப்பினையை இந்திய கடற்படை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த கப்பலுக்கு ஒப்புதல் அடுத்த ஆண்டில் கிடைத்தால் 2030-2031 வாக்கில் அந்த கப்பல் தயாராகும், பின்னர் அதே காலகட்டத்தில் சோதனைகளும் நடத்தப்படும் என இந்திய கடற்படை நம்புகிறது.

முதலில் சுமார் 65,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலுக்கு திட்டமிட்ட நிலையில் நிதி நிலை காரணமாக தற்போதைய விக்ராந்த் கப்பலின் அளவை (44,000 டன்கள்) கொண்ட ஆனால் சற்றே நவீனமான கப்பலை கட்ட திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.