2045வாக்கில் 100 TEDBF விமானங்கள் இணைக்கப்படும் கடற்படை தளபதி !!

  • Tamil Defense
  • February 18, 2023
  • Comments Off on 2045வாக்கில் 100 TEDBF விமானங்கள் இணைக்கப்படும் கடற்படை தளபதி !!

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது TEDBF Twin Engine Deck Based Fighter எனப்படும் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்குவதில் மிகுந்த உறுதியுடன் உள்ளோம்,

2026ஆம் ஆண்டு வாக்கில் சோதனை விமானம் வெளிவரும் எனவும் பின்னர் 2031-2032 வாக்கில் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் துவங்கும் எனவும் 2040 வாக்கில் இந்திய கடற்படை 45 போர் விமானங்களை வாங்கும் எனவும்

அதன்பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2045 வாக்கில் சற்றே மேம்படுத்தப்பட்ட மேலும் 55 TEDBF விமானங்கள் வாங்கப்படும் எனவும் இந்த இரண்டாம் தொகுதி விமானங்கள் பல வகைகளில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு இணையானதாக இருக்கும் எனவும் கூறினார்.

இதற்கிடையே இந்திய கடற்படை தற்போது பயன்பாட்டில் உள்ள Mig-29K ரக போர் விமானங்களை படைவிலக்கம் செய்து விட்டு 26 போர் விமானங்களை வெளிநாட்டில் இருந்து அவசர கால தேவையை கருத்தில் கொண்டு வாங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.