ஆயுதம் தாங்கிய ட்ரோன் மீது ஆர்வம் காட்டும் இந்திய தரைப்படை மற்றும் துணை ராணுவ படைகள் !!

விரைவில் இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த Archer எனப்படும் ஆளில்லா விமானத்தின் ஆயுத பயன்பாட்டு சோதனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் இந்த ஆளில்லா விமானத்தை இந்திய தரைப்படை மற்றும் துணை ராணுவ படைகள் தங்களது படைகளில் இணைத்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது SR – UAV – W Short Range Unmanned Aerial Vehicle Weaponised அதாவது ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானம் ஆகும் இது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ட்ரோனை கண்காணிப்பு , உளவு , இலக்குகளை அடையாளம் காணுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம், சுமார் 22000 அடி உயரத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.