200 போர் மற்றும் பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளோம் – இந்தியா ராணுவத் தளபதி .

ஏறக்குறைய 95 பிரசந்த் லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள் (எல்சிஎச்) மற்றும் பழைய  சீட்டாக்கள் மற்றும் சேட்டாக்களுக்குப் பதிலாக கிட்டத்தட்ட 110 லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்களையும் (எல்யுஎச்) வாங்க ராணுவம் எதிர்பார்க்கிறது என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

பெங்களூரில் நடந்து வரும் ஏரோ இந்தியா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ராணுவம் ஆறு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை (ஏஎல்ஹெச்) பெற உள்ளதாக கூறியுள்ளார்.

கூடுதலாக, இராணுவம் 2024 ஆம் ஆண்டில் ஆர்டர் செய்த அனைத்து ஆறு அமெரிக்க அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் பெற உள்ளது. மேலும் கூடுதல் ஆர்டர்களாக பிரசந்த் வானூர்திகளையும் பெற உள்ளதாக ஜெனரல் பாண்டே கூறினார்.