இந்திய விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்திய கூட்டு பயிற்சி !!

தீபகற்ப இந்தியாவின் கடலோர பகுதிகளையோட்டி கடந்த புதன்கிழமை அன்று இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டன.

இந்த பயிற்சிகளின் போது நிலத்தில் இருந்து கடல் இலக்குகளை தாக்கி அழிக்கும் பயிற்சிகள் நடத்தப்பட்டன அதில் போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

குறிப்பாக நான்கு Su-30 விமானங்களுக்கு நடுவானில் டேங்கர் விமானங்களில் இருந்து எரிபொருள் நிரப்பி சுமார் 2500 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த பக்கம் உள்ள இலக்குகளை தாக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய கடற்படை தனது BOEING P8I தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களை களமிறக்கியது இதன்மூலம் கள நிலவரத்தை உடனடியாக பெற்று அதற்கேற்ப செயல்பட்டு தாக்குதல் நடத்தும் முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது இந்தியாவின் தீபகற்ப பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.