அடுத்த ஆண்டில் QRSAM வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய தரைப்படை ஆர்டர் !!

  • Tamil Defense
  • February 25, 2023
  • Comments Off on அடுத்த ஆண்டில் QRSAM வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்திய தரைப்படை ஆர்டர் !!

சமீபத்தில் BDL Bharat Dynamics Limited நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கமோடர். சித்தார்த் மிஷ்ரா (ஒய்வு) ஊடகங்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் DRDO Defence Research & Development Organisation உருவாக்கிய QRSAM ஏவுகணைகள் சோதனை கடத்தில் உள்ளதாகவும்,

இந்த ஆண்டு இந்திய தரைப்படை இதற்கான சோதனைகளை துவங்க உள்ளதாகவும் அந்த சோதனைகள் இந்த ஆண்டு இறுதிவரை நடைபெறும் எனவும் சோதனைகள் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு இறுதியில் இந்திய தரைப்படையின் ஆர்டர்கள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்திய தரைப்படை இந்த QRSAM – Quick Reaction Surface to Surface Missile System அமைப்பை தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்களையும் வீழ்த்தும் வகையில் நவீனப்படுத்த அறிவுறுத்திய நிலையில் தற்போது இதன் ரேடார் அமைப்பு அதற்கேற்ப நவீனமயமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.