இந்திய தரைப்படையின் முதலாவது இடைத்தூர ஏவுகணை ரெஜிமென்ட் உருவாக்கம் !!
1 min read

இந்திய தரைப்படையின் முதலாவது இடைத்தூர ஏவுகணை ரெஜிமென்ட் உருவாக்கம் !!

இந்திய தரைப்படையின் முதலாவது இடைத்தூர ஏவுகணை ரெஜிமென்ட் கிழக்க கட்டளையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் சீனா உடனான எல்லையோரம் வான் பாதுகாப்பு திறன்கள் பன்மடங்கு அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய MRSAM ரக ஏவுகணைகளை கொண்டு தான் இந்த புதிய ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் பெயர் பராக்-8 எனவும் இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் IAI ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தவை எனவும் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

இந்திய தரைப்படை அந்த வகையில் 5 இத்தகைய ரெஜிமென்ட்டுகளை உருவாக்க உள்ளது ஒரு ரெஜிமென்ட்டுக்கு 8 லாஞ்சர்கள் வீதம் மொத்தமாக 40 லாஞ்சர்கள் மற்றும் 200 ஏவுகணைகளை சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவற்றை இந்திய தனியார் துறை பாதுகாப்பு நிறுவனமான கல்யாணி மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு நிறுவனமான KRAS Kalyani Rafael Advanced Systems தயாரித்து வழங்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு கட்டளையக தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் கலிதா PVSM, UYSM, AVSM, SM, VSM கலந்து கொண்டார், அப்போது அவர் இது இந்தியாவின் தன்னிறைவு திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல் என பேசினார்.