செவ்வாயன்று இந்திய கடற்படை, அமெரிக்க Predator Drones வாங்குவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், ஆனால் அவற்றில் 60 சதவீதம் உள்நாட்டு உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வைஸ் அட்மிரல் எஸ்என் கோர்மேட் இந்தியா டுடேயிடம் , “நாங்கள் இன்னும் ‘பிரிடேட்டர் ட்ரோன்களைப் பெறும் திட்டத்தைத் தொடர்கிறோம். அதை எப்படி உள்நாட்டில் உருவாக்கலாம் மற்றும் இந்தியாவில் என்னென்ன வசதிகளை உருவாக்கலாம் என்று பார்க்கிறோம் என கூறியுள்ளார்.
துணை அட்மிரல் கோர்மேட் மேலும் கூறுகையில், “நாங்கள் எங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் டிஆர்டிஓ மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் அமெரிக்க பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தமும் ஒன்றாகும் என பேசியுள்ளார்.
தற்போது 60% உள்நாட்டுத் தயாரிப்பாக இந்த ட்ரோன்களை வாங்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏவுகணைகள் உட்பட, தாக்கும் திறன் கொண்ட 30 அமெரிக்கன் predator நீண்ட-தூரம் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை இந்தியா வாங்க திட்டமிட்டது.
இந்தியா தற்போது இரண்டு ட்ரோன்களை இயக்குகிறது, அமெரிக்காவிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவை ஆகும். மேலும் அவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.