முதல்முறையாக ஜப்பான் மண்ணில் இந்திய ஜப்பான் தரைப்படை கூட்டு பயிற்சிகள் !!

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்திய ஜப்பான் தரைப்படைகள் இடையே Dharma Guardian தர்மா கார்டியன் எனும் கூட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டுமே இந்த பயிற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பயிற்சிகள் முதல் முறையாக ஜப்பானிய மண்ணில் நடைபெற உள்ளன.

இதற்காக கார்வால் ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட் இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலமாக கடந்த 12ஆம் தேதி இரவு ஜப்பான் சென்று சேர்ந்தனர், அங்கு ஜப்பான் தரைப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் நாட்டின் ஷீகா மாகாணத்தில் உள்ள இமாஸூ ராணுவ தளத்தில் இன்று முதல் வருகிற மார்ச் 2ஆம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சிகள் நடைபெற உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.