BREAKING இந்திய ஆயுத நிறுவனத்தின் 2000GB தகவல்கள் திருட்டு !!
1 min read

BREAKING இந்திய ஆயுத நிறுவனத்தின் 2000GB தகவல்கள் திருட்டு !!

மஹாரஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தனியார் துறை ராணுவ தயாரிப்பு நிறுவனம் SOLAR INDUSTRIES ஆகும் இது இந்திய ராணுவத்திற்கான பல முக்கிய தளவாடங்களை தயாரித்து வருகிறது.

தற்போது ALPHV எனப்படும் ஹேக்கர் குழுவினர் Black Cat எனப்படும் வைரஸ் மூலமாக இந்த நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தி சுமார் 2000 GB அளவிலான தகவல்களை திருடி உள்ளனர், இவற்றில் பல முக்கிய ராணுவ ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை பெங்களூர் நகரில் இருந்து இயங்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK உறுதிபடுத்தியுள்ளது, இந்த தகவல்கள் எதிரிகள் கையில் சிக்கும் வாய்ப்புகளை புறம் தள்ளி விட முடியாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த ஹேக்கர் குழு தகவல்களை திருடியதும் சோலார் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் தெரிவித்தாகவும் ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளிக்காத காரணத்தால் தற்போது அனைத்து தகவல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த குழு திருடிய தகவல்களில் கீழ்க்கண்ட ஆயுதங்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, அவற்றை இப்போது பார்க்கலாம்,

1) Pinaka Mk1 பினாகா மார்க்-1 ராக்கெட்
2) பினாகா மார்க்-1 எரிபொருள்
3) வழிகாட்டப்பட்ட பினாகா ராக்கெட் எரிபொருள்
4) Akash ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை பூஸ்டர்
5) RTRS அமைப்பின் எரிபொருள்
6) Astra Mk2 அஸ்திரா மார்க்-2 ஏவுகணையின் எரிபொருள்

7) PSLV ராக்கெட்டின் PSOM XL மோட்டார் எரிபொருள்
8) Skyroot நிறுவன ராக்கெட்டுகளுக்கான எரிபொருள்
9) Star Booster எரிபொருள்
10) HEMRL PJ -10 பிரம்மாஸ் ஏவுகணையின் சுதேசி பூஸ்டர்

11) பிரம்மாஸ் ஏவுகணையின் எரிபொருள்
12) A1-P(P1 & P2) எரிபொருள்
13) Konkur , INVAR ATGM டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், MPBX பிளாக்குகள்
14) Vibhav விபவ், Vishal விஷால் மற்றும் Adrashy அத்ராஷி போன்ற கண்ணிவெடிகள்
15) PGB – 450, GP – 250 போன்ற குண்டுகள் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.