இந்தியா தனது இராணுவத்திற்கு எதிர்கால சண்டையிடும் வாகனங்களை வாங்க உள்ளது.இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டென்டரில் ஜெர்மன் நிறுவனம் பங்கேற்க உள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த Rheinmetall Landsysteme நிறுவனம் தனது Lynx அதிநவீன சண்டையிடும் வாகனத்தை வழங்க முன்வந்துள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்றம் வழங்கி இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்தியாவில் இந்த வாகனங்களை தயாரிக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது.34 முதல் 50 டன்கள் வரை எடையுடையது இந்த வாகனம்.
500கிமீ வரை செல்லக்கூடியது இந்த வாகனம்.அதிநவீன துப்பாக்கி அமைப்புகளையும் இந்த வாகனம் பெற்றுள்ளது.