பாக்கில் போட்டுத் தள்ளப்பட்ட அல்-பத்ர் பயங்கரவாத கமாண்டர்
1 min read

பாக்கில் போட்டுத் தள்ளப்பட்ட அல்-பத்ர் பயங்கரவாத கமாண்டர்

பாகிஸ்தானின் கராச்சியில் அல் பத்ர் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் கமாண்டரான செய்து காலித் ராசா என்பவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான்.

வடக்கு காஷ்மீரில் நூறு பயங்கரவாதிகளுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த செய்து காலித் என்பவன்.இவனை தற்போது அடையாளம் தெரியாத ஒருவன் மிக அருகில் வந்து போட்டுத் தள்ளியுள்ளான்.

தற்போது தார்-இ- அர்கம் பள்ளிகளின் துணை இயக்குநராகவும், பாக்கில் உள்ள தனியார் பள்ளிகள் குழுமத்துக்கான துணை சேர்மேன் ஆகவும் பணியாற்றி வந்துள்ளான்.

பாக்கில் இது போல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல.முன்னதாக கடந்த வாரத்தில் ஹிஸ்புல் முசாகிதின் கமாண்டர் பசீர் அமகது பீர் என்பவனும் அடையாள தெரியாத நபரால் பாக்கில் ராவல்பிண்டியில் போட்டுத் தள்ளப்பட்டான்.