அமெரிக்கா, கனடாவைத் தொடர்ந்து சீனாவிலும் தென்பட்ட பறக்கும் மர்மபொருள் ; விவரங்கள் இங்கே

  • Tamil Defense
  • February 13, 2023
  • Comments Off on அமெரிக்கா, கனடாவைத் தொடர்ந்து சீனாவிலும் தென்பட்ட பறக்கும் மர்மபொருள் ; விவரங்கள் இங்கே

அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து, சீன வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வார தொடக்கத்தில், அமெரிக்காவும் கனடாவும் மூன்று மர்மபொருளை வானில் சுட்டு வீழ்த்தின. பலூன் போன்ற தோற்றம் கொண்ட அந்த பொருட்கள் சீனாவில் இருந்து வந்தவை என கூறப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் கட்டளையின் பேரில் அமெரிக்க போர் விமானம் ஒன்று, அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை நோக்கங்களுக்காக தற்செயலாக அமெரிக்க வான்வெளியில் நுழைந்த பலூன் விமானத்தை அழிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்தது.