இந்திய ராணுவத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ரைபிள்களின் முதல் தொகுதி தயார்

  • Tamil Defense
  • February 7, 2023
  • Comments Off on இந்திய ராணுவத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ரைபிள்களின் முதல் தொகுதி தயார்

இந்திய ஆயுதப் படைகளுக்கு ஏகே-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்திய ராணுவத்துக்கான துப்பாக்கிகளின் முதல் தொகுதி தயாரிக்கப்பட்டது. இதை Rosoboronexport நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் 2019 இல் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கும் கோர்வா ஆயுதத் தொழிற்சாலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மெதுவாக இருந்த காரணத்தால் 70,000 துப்பாக்கிகள் அவசர பாதையில் வாங்கப்பட்டன.
5,000 துப்பாக்கிகளின் ஆரம்பத் தொகுப்பில் 5% உள்நாட்டு அமைப்புகள் இருக்கும், இது 32 மாதங்களில் முதல் 70,000 துப்பாக்கிகள் தயாரிக்கப்படும்போது 70% ஆக அதிகரிக்கப்படும். நிறுவனம் 100% உள்ளூர்மயமாக்கலை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.