ஏரோ இந்தியா 2023: பிரலே ஏவுகணை பற்றிய விவரங்கள் வழங்கிய டிஆர்டிஓ 

  • Tamil Defense
  • February 17, 2023
  • Comments Off on ஏரோ இந்தியா 2023: பிரலே ஏவுகணை பற்றிய விவரங்கள் வழங்கிய டிஆர்டிஓ 


பிரலே குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.மூன்று வெவ்வேறு வகையான வெடிபொருளை  சுமந்து செல்லக்கூடியது மற்றும் 150 முதல் 400 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியில் பிரலே என அழைக்கப்படும் தந்திரோபாய, குறுகிய தூர தரை-தரை தாக்கும் ஏவுகணையின் விவரங்களை வழங்கியுள்ளது.

இந்த ஏவுகணை மூன்று விதமான வெடிபொருளைச் சுமந்து செல்லக்கூடியது என்றும் 150 முதல் 400 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

டிஆர்டிஓவின் கூற்றுப்படி, ஏவுகணை 10 மீட்டருக்கும் ரேடியசிற்குள் இலக்கை துல்லியமாக தாக்கும்.

பிரலே ஏவுகணைகள் கேனிஸ்டரைஸ் செய்யப்பட்டவை என்றும், டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.