இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் மிகக் குறுகிய தூர வான்-பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளின் மேம்பாட்டை நிறைவு செய்துள்ளது என்று ஏரோ இந்தியா 2023 இல் டிஆர்டிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
DRDO அதிகாரி பேசுகையில் VSHORADS இன் மேம்பாடு முடிந்துவிட்டதாகவும், ஏவுகணையின் சோதனைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். VSHORADS என்பது மனிதனால் கொண்டு செல்லக்கூடிய வான்-பாதுகாப்பு அமைப்பு (MANPADS) ஆகும்.
ADA இன் செய்தித் தொடர்பாளர் பேசுகையில் VSHORADS “வரவிருக்கும் மாதங்களில் மேலும் 10 சோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.