அந்தமானிலும் பறந்த சீனாவின் உளவு பலூன் ?

  • Tamil Defense
  • February 6, 2023
  • Comments Off on அந்தமானிலும் பறந்த சீனாவின் உளவு பலூன் ?

அமெரிக்க வான் பகுதியில் பறந்த சீன பலூன் அன்றை அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த F-22 விமானம் வானிலேயே சுட்டு வீழ்த்தியது.இதே போன்றதொரு பலூன் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியில் உள்ள இந்த கடற்படை தளம் மீது கடந்த ஜீன் 2020ம் ஆண்டு பறந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல கடந்த ஜனவரி 2022லும் இதே போன்ற அமைப்பைக் கொண்ட பலூன் ஒன்று அந்தமானில் இந்திய கடற்படை தளம் மீது பறந்துள்ளது.அது உண்மையாகவே உளவு பலூனா அல்லது காலநிலை கணிப்பு தொடர்பான பலூனா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் செய்திகளில் பெரும்பாலும் இடம்பெறவில்லை..

தற்போது அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பலூன் காலநிலை கணிக்கும் பலூன் எனவும் அது தவறுதலாக அமெரிக்க வான்பரப்பில் நுழைந்துவிட்டது எனவும் சீனா கூறியுள்ளது.இதற்கு முன் ஐந்து கண்டகளிலும் பல நாடுகளிலும் இந்த பலூன் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.