அமெரிக்கா, தைவான் பதட்டங்களுக்கு மத்தியில் 2035ஆம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்களை மூன்று மடங்காக குவிக்கும் சீனா

  • Tamil Defense
  • February 13, 2023
  • Comments Off on அமெரிக்கா, தைவான் பதட்டங்களுக்கு மத்தியில் 2035ஆம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்களை மூன்று மடங்காக குவிக்கும் சீனா

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2035 ஆம் ஆண்டுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை மூன்று மடங்காக உயர்த்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கையிருப்பு 400க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அணு ஆயுதங்கள் 2027 ஆம் ஆண்டில் 550 ஆகவும், 2035 ஆம் ஆண்டில் 900 ஆகவும் அதிகரிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

டிசம்பர் 2022 இல் பென்டகன் அறிக்கையானது 2035 ஆம் ஆண்டளவில் சீனாவிடம் சுமார் 1,500 அணு ஆயுதங்களை வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.