தைவானுக்கு ஆயுத ஏற்றுமதி அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதித்த சீனா !!

  • Tamil Defense
  • February 19, 2023
  • Comments Off on தைவானுக்கு ஆயுத ஏற்றுமதி அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதித்த சீனா !!

அமெரிக்காவை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான Lockheed Martin Corp மற்றும் Raytheon Technologies Corp ஆகியவை தைவானுக்கு தங்களது ஆயுதங்களை ஏற்றுமதி செய்த காரணத்தால் அவற்றின் மீது சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அதாவது Unreliable Entities List எனப்படும் நம்பகத்தன்மை இல்லா அமைப்புகள் பட்டியலில் இவற்றின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த நிறுவனங்களால் சீனாவில் தங்களது வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையை சீன அரசின் வர்த்தக அமைச்சகம் எடுத்துள்ளது மேலும் இதற்கு முன்னரும் இதே நிறுவனங்கள் மீது சீனா நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.