சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக LAC அருகே புதிய ரயில் பாதையை திட்டமிட்ட சீனா – இந்தியா கவலை

திபெத் தன்னாட்சிப் பகுதி (TAR) அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டத்தின் படி, ரயில் பாதை LAC அருகிலும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாகவும் இயக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எல்ஏசி அருகே சீனாவின் செயல்பாடு இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.

ஜனவரி 12 அன்று, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) சீன துருப்புக்களின் எண்ணிக்கையில் ‘சிறிது அதிகரிப்பு’ ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.