தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன் கடலோரக் காவல்படை கப்பலை தாக்கிய சீனா
1 min read

தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன் கடலோரக் காவல்படை கப்பலை தாக்கிய சீனா

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) கப்பல் ஒன்றை சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, “இராணுவ தர” லேசரை கொண்டு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனக் கப்பல் பிலிப்பைன்ஸ் கப்பலில் இருந்து 137 மீட்டர் மிக அருகே வந்து  “ஆபத்தான முறையில் செயல்பட்டதாக”  பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை  அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது லேசரை செலுத்தியதும் பிலின்ப்பைன்ஸ் வீரர்களுக்கு சிறிது நேரம் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று பிலிப்பைன்ஸ் கப்பல் “சீனாவின் அனுமதியின்றி ரெனாய் ரீஃப் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது” என்று  தெரிவித்துள்ளது.