பிரேசில் நாட்டை சேர்ந்த வானூர்தி தயாரிப்பு நிறுவனமான Embraer எம்ப்ரேர் இந்திய விமானப்படைக்கு தனது புத்தம் புதிய C-390 Millenium ரக ராணுவ போக்குவரத்து விமானத்தை விற்க முன்வந்துள்ளது.
இந்திய விமானப்படை தனது பழைய An-32 ரக போக்குவரத்து விமானங்களை படை விலக்கம் செய்து விட்டு புதியதாக நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கான முதல் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து எம்ப்ரேர் நிறுவனம் நமது HAL Hindustan Aeronautics Limited அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றும் திட்டத்தில் இறங்கி உள்ளது ஆகவே மேற்கண்ட விமானத்தின் திறன்களை சோதித்து நிருபிக்க தயாராக உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
இந்த விமானம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து இயங்கும் திறன் கொண்டது எனவும், AWACS, எரிபொருள் டேங்கர், வீரர்கள் மற்றும் தளவாட போக்குவரத்து, தேடுதல் மற்றும் மீட்பு போன்ற பணிகளை களத்திலேயே சிறு மாறுதல்களை செய்வதன் மூலமாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
எம்ப்ரேர் நிறுவனம் ஏற்கனவே HAL நிறுவனத்துடன் C-390 விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, மட்டுமின்றி தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு தயார் எனவும் விமானத்தில் இந்தியா தனக்கு தேவையான கருவிகள் மற்றும் அமைப்புகளை பொருத்தி கொள்ளலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே HAL தனது தயாரிப்பு பட்டியலில் ஒரு நடுத்தர போக்குவரத்து விமானமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் Airbus C-295M ஆர்டரை பெற நினைத்தது ஆனால் அது கிடைக்கவில்லை ஆகவே இந்த C-390 விவகாரத்தில் சற்றே அதிகமாக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.