பயணிகள் விமானத்தை டேங்கர் விமானமாக மாற்ற உதவ தயார் போயிங் Boeing அறிவிப்பு !!

  • Tamil Defense
  • February 25, 2023
  • Comments Off on பயணிகள் விமானத்தை டேங்கர் விமானமாக மாற்ற உதவ தயார் போயிங் Boeing அறிவிப்பு !!

இந்திய விமானப்படை புதியதாக டேங்கர் விமானங்கள் வாங்குவது நிதி நிலைக்கு ஒத்து வராத காரணத்தால் சற்றே பழைய பயணிகள் விமானங்களை வாங்கி அவற்றை டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்களாக மாற்றியமைத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் IAI Israeli Aerospace Industries ஆகியவை இணைந்து ஈடுபட்டு உள்ளன, IAI இத்தகைய மாற்றியமைத்தல் பணியில் அனுபவம் மிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக 6-7 வருடங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த Boeing B767 ரக பயணிகள் விமானங்களில் ஆறினை வாங்கி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் விதமாக டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்களாக மாற்றியமைக்க உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் போயிங் BOEING நிறுவனம் இந்த திட்டத்தில் HAL மற்றும் IAI நிறுவனங்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயார் எனவும் கூடவே தனது KC – 46 Pegasus டேங்கர் போக்குவரத்து விமானங்களை விற்கவும் தயார் என தெரிவித்துள்ளது.

Boeing நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்திய விமானப்படை வட்டாரங்களில் எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையாகாது.