இந்தியாவின் தேஜாஸ் வாங்க திட்டமிடும் புதிய நாடு!! எந்த நாடு ?
இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த LCA Tejas Mk1 தேஜாஸ் மார்க் -1 போர் விமானங்கள் மீது பல நாடுகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் போட்ஸ்வானாவும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவின் விமானப்படை ஒன்பது CF-5 மற்றும் ஆறு CF-5D Tiger 2 போர் விமானங்களை இயக்கி வருகிறது இவற்றை கனடாவிடம் இருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் போட்ஸ்வானா வாங்கியது.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் F-5 விமானங்களின் கனேடிய காப்பி மேலும் 1950களில் வடிவமைக்கப்பட்டு 1960களில் தயாரிக்கப்பட்டவை ஆகும், தற்போது இவற்றின் தயாரிப்பு நடைபெறவில்லை உதிரி பாகங்களும் தயாரிக்கப்படவில்லை.
ஆகவே போட்ஸ்வானா நாட்டிற்கு இவற்றை பராமரிப்பது இமாலய செயலாக உள்ளது அதிக பணமும் செலவாகிறது ஆகவே இவற்றை படைவிலக்கம் செய்து விட்டு புதிய போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டு வருகிறது .
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஸ்வீடன் நாட்டின் SAAB Gripen போர் விமானங்கள் வாங்க முயன்ற போது உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது, தற்போது இதற்காக இந்தியாவுடன் போட்ஸ்வானா பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.