வானூர்திகளுக்கான எஃகு கலவை உலோகங்கள் தயாரிக்க ஒப்பந்தம் !!
1 min read

வானூர்திகளுக்கான எஃகு கலவை உலோகங்கள் தயாரிக்க ஒப்பந்தம் !!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏரோ இந்தியா 2023 Aero India 2023 வானூர்தி கண்காட்சியில் இந்தியாவிலேயே வானூய்திகளுக்கான எஃகு கலவை உலோகங்கள் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதாவது இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இந்திய தனியார் துறை நிறுவனங்களான Saarloha Advanced Materials Pvt Ltd சார்லோஹா அதிநவீன உலோகங்கள் பிரைவேட் லிமிடெட் மற்றும் Kalyani கல்யாணி குழுமத்தின் Bharat Forge ஆகிய நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட ஒப்பத்தத்தை செய்து கொண்டு உள்ளன.

தற்போது இத்தகைய உலோகங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன இதன் காரணமாக வெளிநாடுகளின் உதவி நமக்கு தேவைப்படுகிறது ஆனால் இந்த ஒப்பந்தம் அதை மாற்றியமைக்கும் என்றால் மிகையாகாது.

இந்தியாவின் விண்வெளி மற்றும் வானூர்தி சார்ந்த திட்டங்களுக்கு இதூ வரப்பிரசாதம் ஆகும், இந்தியா மேற்கண்ட துறைகளில் தன்னிறைவு பெற இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.