ஏரோ இந்தியா 2023:  ZSU-23-4 ஷில்காவை மேம்படுத்தும் BEL நிறுவனம்

  • Tamil Defense
  • February 20, 2023
  • Comments Off on ஏரோ இந்தியா 2023:  ZSU-23-4 ஷில்காவை மேம்படுத்தும் BEL நிறுவனம்

இந்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ZSU-23-4 ஷில்கா தானியங்கி விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை (SPAAGs) இந்திய ராணுவத்துடன் இணைந்து மேம்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஷில்க் மாடலை நிறுவனம் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது.

BEL இன் படி, ஷில்கா அமைப்பில் 3D பிளானர் ஆக்டிவ் ஃபேஸ்டு-அரே சாலிட்-ஸ்டேட் ரேடார் மற்றும் ஒரு எலக்ட்ரோ-ஆப்டிகல் ஃபயர்-கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது, இது பகல் மற்றும் இரவு நேரத்தில் செயல்படும் திறனை மேம்படுத்தியுள்ளது.