பிரிட்டிஷ் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனமான BAE Systems மற்றும் இந்தியாவின் முன்னனி விமானிகள் பயிற்சி நிறுவனமான FSTC ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு உள்ளன.
அதன்படி இந்திய விமானப்படையின் போர் விமானிகளை பயிற்றுவிப்பதற்கான Simulator சிமுலேட்டர் எனப்படும் அமைப்புகளை இரண்டு நிறுவனங்களும் கூட்டாக தயாரித்து வழங்க உள்ளன.
இதற்காக இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் BAE HAWK MK132 FJT ரக பயிற்சி விமானத்திற்கான ஒரு Twin Dome Full Mission Simulator அமைப்பை வடிவமைத்து உருவாக்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக நிறுவ உள்ளனர்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது பெங்களூர் நகரில் நடைபெற்று முடிந்த ஏரோ இந்தியா 2023 (Aero India 2023) வானூர்தி கண்காட்சியின் போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது ஆகும்.