சண்டிகர் யூனியன் பிரதேச பகுதியில் இந்திய விமானப்படையின் 3 BRD – Base Repair Depot 3ஆவது பராமரிப்பு தளம் அமைந்துள்ளது, இங்கு தான் கடந்த 26ஆம் தேதி இந்த பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது ஆர்.பி.சிங் திந்ட்ஸா எனும் MES Military Engineering Services ராணுவ பொறியியல் சேவைகள் பிரிவின் ஒப்பந்ததாரர் ஆவார், இவர் கொடுத்துள்ள புகார் மனுவில் 26ஆம் தேதி தனக்கான நிலுவை தொகையை பெற சென்றதாகவும்
அப்போது இந்திய விமானப்படையின் சார்ஜென்ட் நுழைவு வாயில் அருகே வாகனத்தை நிறுத்தி நுழைவு சீட்டை காண்பிக்க கோரியதாகவும் அப்போது தாங்கள் நுழைவு சீட்டை புதுப்பிக்க சமர்பித்து உள்ளதாகவும் ஆனால் தங்களிடம் 12ஆவது விமானப்படை அணி வழங்கிய பாதுகாப்பு சீட்டு உள்ளதாக கூறியதாகவும்
உடனே அந்த பாதுகாப்பு அதிகாரி தங்களை பார்த்து கெட்ட வார்த்தை பேசியதாகவும் உடனடியாக வாகனத்தை எடுத்து செல்லுமாறும் இல்லையென்றால் சுட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் விமானப்படை தளத்தின் பாதுகாப்பு அதிகாரியான க்ரூப் கேப்டன் தேவேந்தர் சைனி இது பொய்யான புகார் எனவும், அந்த நபர் நுழைவு சீட்டு இல்லாமல் ஆக்ரோஷமாக உள்ளே அத்துமீறி நுழைய முயன்றதாகவும் பாதுகாப்பு அதிகாரியை நோக்கி கெட்ட வார்த்தை பேசியதாகவும் அதனாலேயே தான் எச்சரிக்கை விடுத்ததாகவும் அது தொடர்பான கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகள் உள்ளதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாக்குவாதம் பற்றிய காணொளி ஒன்றில் அந்த அதிகாரி “சல்னி கர் தூங்கா” என இந்தியில் பேசுவதை காண முடிகிறது அதாவது சுட்டு விடுவேன் என அர்த்தமாகும், அதன் பிறகு “அப் காலி நிகல்” அதாவது இப்போது |”கெட்ட வார்த்தை பேசு” என கூறுவதும் கேட்கிறது ஆகவே முதலில் அந்த நபர் விமானப்படை அதிகாரியிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட விதம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தது உறுதியாகிறது.