Day: February 7, 2023

செக்மேட் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்திற்கு இந்தியாவை அழைக்க ரஷ்யாதிட்டம்

February 7, 2023

ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியில் கலந்து கொள்ளும் ரஷ்ய பிரதிநிதிகள் ஐந்தாம் தலைமுறை விமானங்களை, குறிப்பாக செக்மேட் விமானத் தயாரிப்பில் இந்தியாவுடன் சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமானக் கண்காட்சி பிப்ரவரி 13-17 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. செக்மேட் இலகுரக ஐந்தாம் தலைமுறை போர்விமானம் ஆகும்.புதிய ஒற்றை எஞ்சின் போர் விமானம் Stealth தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. போர் விமானம் ஏழு டன்களுக்கு மேல் ஆயுதங்கள் சுமந்து […]

Read More

பயங்கரமாக பாதிக்கப்பட்ட துருக்கி- உதவிக்கரம் நீட்டிய இந்தியா

February 7, 2023

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் ஃபிரத் சுனெல், புது தில்லியை ‘தோஸ்த்’ என்று குறிப்பிட்டுள்ளார். செவ்வாயன்று, இந்தியா தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மீட்புக் குழுவுடன் மனிதாபிமான உதவியின் முதல் தொகுதியை துருக்கிக்கு அனுப்பியது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (எச்ஏடிஆர்) […]

Read More

இந்திய ராணுவத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ரைபிள்களின் முதல் தொகுதி தயார்

February 7, 2023

இந்திய ஆயுதப் படைகளுக்கு ஏகே-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் இந்திய ராணுவத்துக்கான துப்பாக்கிகளின் முதல் தொகுதி தயாரிக்கப்பட்டது. இதை Rosoboronexport நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் 2019 இல் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கும் கோர்வா ஆயுதத் தொழிற்சாலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மெதுவாக இருந்த காரணத்தால் 70,000 துப்பாக்கிகள் அவசர பாதையில் வாங்கப்பட்டன.5,000 துப்பாக்கிகளின் ஆரம்பத் தொகுப்பில் 5% உள்நாட்டு அமைப்புகள் இருக்கும், இது […]

Read More