உலகின் மிகச்சிறந்த சுகோய் விமானங்கள் இந்தியா உடையது !!
உலகில் ரஷ்யா இந்தியா சீனா மலேசியா இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் சுகோய் – 30 போர் விமானத்தை பயன்படுத்தி வருகின்றன ஆனால் அவற்றில் எல்லாம் மிகவும் சிறந்தது இந்திய விமானப்படையின் சுகோய்-30 போர் விமானங்கள் ஆகும்.
இதற்கு இந்திய சுகோய்-30 Sukhoi Su-30 MKI விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் ஒரு காரணம் ஆகும், BRAHMOS பிரம்மாஸ், NGARM – Next Generation Anti Radiation Missile அடுத்த தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள்,
அஸ்திரா ASTRA தொலைதூர வானிலக்கு ஏவுகணைகள், இஸ்ரேலிய SPICE – 2000 ரக துல்லிய தாக்குதல் குண்டுகள் போன்றவை நமது சுகோய் – 30 போர் விமானங்களின் பிரதான ஆயதங்களாகும் இவை பன்மடங்கு பலத்தை அளிக்கும் நிலையில்
இந்திய சுகோய் விமானங்களில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் பற்றி விமானப்படை அதிகாரியும் சுகோய் விமானியுமான க்ரூப் கேப்டன் அர்பித் கால்ரா பேசுகையில் இந்தியா மற்றும் உலகின் மிகச்சிறந்த பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகள், சென்சார்கள் மற்றும் ஏவியானிக்ஸ் அமைப்புகள் நமது சுகோய் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளன
உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி உள்ளோம் இதன் சிறப்பம்சங்கள் மற்ற விமானங்களை விட அதிக வலுவை அளிக்கின்றன, நிச்சயமாக உலகின் மிகச்சிறந்த போர் விமானங்களில் இதுவும் ஒன்று என கூற முடியும் எனவும்
மேலும் இந்திய விமானப்படையின் பயிற்சி முறைகள் மற்றும் இந்திய விமானிகளின் தீவிர பயிற்சியும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும் என கூறினார், 272 எனும் எண்ணிக்கையுடன் உலகிலேயே அதிக சுகோய் போர் விமானங்களை இயக்கும் நாடு என்ற பெருமை இந்தியா உடையது என்பது குறிப்பிடத்தக்கது.