பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் சமீபத்தில் துபாயை சேர்ந்த அல் அரபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியா உடன் நடைபெற்ற மூன்று போர்களில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுள்ளது.
தற்போது இந்தியாவுடன் அமைதியையும், சுமுகமான உறவையும் விரும்புகிறோம் ஆகவே காஷ்மீர் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பற்றி கூட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா உடனான மோதல் காரணமாக பாகிஸ்தானுடைய வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் அதன் காரணமாக வேலைவாய்ப்பு திண்டாட்டம், வறுமை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை பாகிஸ்தானை வாட்டி வதைத்து வருகிறது
இந்திய பிரதமருக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் நாம் அறிந்தே அண்டை நாடுகள் ஆகவில்லை ஆனால் அமைதியை நாம் ஒன்று சேர்ந்து நிலைநாட்ட முடியும் என கூறியுள்ளார்.