விரைவில் இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் பயிற்சி விமானங்கள் !!

அடுத்த மாதம் இந்திய விமானப்படையிடம் முதலாவது TEJAS MK1 தேஜாஸ் மார்க்-1 பயிற்சி விமானத்தை HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்படைக்க உள்ளது.

இதை தவிர மேலும் நான்கு பயிற்சி விமானங்கள் பறத்தல் தர சான்றிதழ் சோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளன ஆகவே அவை அனைத்தும் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இவற்றை தவிர ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் மேலும் 18 தேஜாஸ் பயிற்சி விமானங்களுக்கான ஆர்டர் கைவசம் உள்ளது அவை அடுத்த ஆண்டு டெலிவரி செய்யப்படும்.

இந்த விமானப்படைக்கு 2024 மார்ச் மாதம் இரண்டு Tejas Mk1A விமானங்கள் டெலிவரி செய்யப்படும் மேலும் 71 விமானங்கள் அதற்கடுத்து டெலிவரி செய்யப்படும் ஆகவே இந்த பயிற்சி விமானங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் விமானிகளின் பயிற்சி அதிக காலம் பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.