விரிவாக்கப்படும் தேஜாஸ் ஆயுதங்கள் !!

  • Tamil Defense
  • January 3, 2023
  • Comments Off on விரிவாக்கப்படும் தேஜாஸ் ஆயுதங்கள் !!

இலகுரக தேஜாஸ் மார்க் – 1 போர் விமானத்தின் ஆயுத அமைப்பு விரிவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, அதன்படி முதலாவது மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் மார்க் -1 விமானம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட விமானத்தில் அஸ்திரா மார்க் – 1, ASRAAM , ரூத்ரம் -1 மற்றும் ரூத்ரம் – 2 , SCALP போன்ற பல்வேறு வகையான அதிநவீன ஆயுதங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும்

அஸ்திரா மார்க் -1 , ASRAAM போன்ற ஏவுகணைகளை தேஜாஸ் மார்க் -1 போர் விமானத்துடன் இணைப்பதற்கான சோதனைகள் விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இது தவிர 2025ஆம் ஆண்டு வாக்கில் பிரம்மாஸ் அடுத்த தலைமுறை ஏவுகணையும் இதனுடன் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.