கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு விமான பாதுகாப்பில் நல்ல ஆண்டாக அமைந்தாலும் விபத்து ஒன்றில் இரண்டு போர் விமானிகளை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 பயிற்சி விமானம் இரவு நேர பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளானது இதில் இரண்டு விமானிகளும் படுகாயமடைந்து வீரமரணம் அடைந்தனர்.
ஃப்ளைட் லெஃப்டினன்ட் அத்வைத்தியா பால் மற்றும் விங் கமாண்டர் ராணா ஆகிய இரு அதிகாரிகள் தான் அந்த விமானிகள் ஆவார்.
மேற்குறிப்பிட்ட விமானம் விபத்தை சந்தித்தற்கான காரணம் இனியும் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதும், 2021ஆம் ஆண்டு ஐந்து மிக்-21 விமானங்கள் மற்றும் ஒரு மிராஜ் 2000 என ஆறு விமானங்கள் விபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது