உக்ரைனுடைய ஸப்ரோஸியா பகுதிக்கு அருகே ரஷ்யாவின் S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உக்ரைன் அழித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலில் இது S-300 அமைப்பாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் மூலமாக இது S-400 அமைப்பின் லாஞ்சர் தான் என்பது உறுதியாகி உள்ளது.
போர்க்கள முன்னனியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இதனை எப்படி அழித்தனர் என கேள்விகள் எழுந்துள்ள நிலையில் உக்ரைன் தரைப்படை வீரர்களின் சிறு குழுவினர் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
எது எப்படியோ இது ரஷ்யாவின் முதல் S-400 இழப்பாகும், இவற்றை வாங்கி வரும் இந்தியா நிலைமையை உன்னிப்பாக கவனித்து காரணத்தை கண்டறிய விரும்புவது குறிப்பிடத்தக்கது ஆகும்.