Breaking News

S-500 ஏற்றுமதி இந்தியாவுக்கு முன்னுரிமை ரஷ்யா அறிவிப்பு !!

  • Tamil Defense
  • January 23, 2023
  • Comments Off on S-500 ஏற்றுமதி இந்தியாவுக்கு முன்னுரிமை ரஷ்யா அறிவிப்பு !!

ரஷ்ய ஊடகமான TASS ரஷ்ய ராணுவம் அதிநவீன S-500 Prometheus வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற துவங்கி உள்ளதாகவும் விரைவில் இதன் ஏற்றுமதி வடிவம் விற்பனைக்கு வரும் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதாகும், கடந்த 2021 ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசாவ் இந்தியா வந்த போது இந்தியா தான் முதல் S-500 கஸ்டமராக இருக்கும் என கூறினார்.

இந்த S – 500 ஏற்கனவே உள்ள S – 400 அமைப்பின் மேம்பட்ட வடிவமாகும், அதை விட அதிக தூரத்தில் உள்ள அதனால் தாக்க முடியாத பலிஸ்டிக் ஏவுகணைகள், டேங்கர் மற்றும் ஏவாக்ஸ் விமானங்கள் ஆகியவற்றை S – 500 வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் என்பது அதன் சிறப்பம்சம் ஆகும்.

சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 20 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்டறிந்து அவற்றில் 10 ஏவுகணைகளை ஒரேடியாக அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.