1 min read
இந்திய டாடா லாரிகளை இறக்குமதி செய்த மொராக்கோ ராணுவம் !!
இந்தியாவின் டாடா குழுமம் தயாரிக்கும் ராணுவ லாரிகள் டேங்கர் லாரிகளை மொராக்கோ ராணுவம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் நிலையில்
தற்போது மீண்டும் டாடா லாரிகளை மொராக்கோ தரைப்படை இறக்குமதி செய்துள்ளது ஆனால் இந்த முறை சற்றே பெரிய லாரிகளை வாங்கியுள்ளது.
அதாவது TATA LPTA – 244 (6×6) ரகத்தை சேர்ந்த 92 லாரிகளை வாங்கியுள்ளது இவற்றை குஜராத் மாநிலத்தில் இருந்து கடல்மார்க்கமாக அதாவது கப்பல் மூலமாக மொராக்கோ நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த லாரிகளை படை வீரர்களின் போக்குவரத்து, பிரங்கிகளை இழுத்து செல்ல, பல குழல் ராக்கெட் அமைப்புகளை சுமக்க, வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சுமக்க என பல்வேறு விதமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.