இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள்; மார்ச்சில் ஒப்பந்தம் ஃபிரெஞ்சு ஊடகங்கள் !!

  • Tamil Defense
  • January 5, 2023
  • Comments Off on இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்கள்; மார்ச்சில் ஒப்பந்தம் ஃபிரெஞ்சு ஊடகங்கள் !!

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகங்கள் இந்திய கடற்பயைக்கான போர் விமான தேர்வில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எழுதி வருகின்றன.

அதாவது போர் விமான தேர்வில் அமெரிக்காவின் Boeing F/A – 18 Super Hornet மற்றும் Dassault Rafale M (Marine) ரக விமானங்கள் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள INS HANSA ஹன்சா படை தளத்தில் நடைபெற்ற சோதனையில் பங்கேற்ற நிலையில் ரஃபேல் தேர்வாகி உள்ளதாகவும்

மார்ச் மாதம் ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு அரசு முறை சுற்று பயணமாக வரும்போது 27 போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகும் என ஃபிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் விமான தேர்வில் அமெரிக்காவின் Boeing F/A – 18 SUPER HORNET விமானங்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ஃபிரான்ஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்தி இந்தியா அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் என மூன்று நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் சில இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு இனியும் காலம் தேவைப்படும் காரணம் விலை மற்றும் கொள்முதல் தொடர்பான பல்வேறு விஷயங்களில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.