பாகிஸ்தான் தனது கிழக்கு எல்லையோரம் அதாவது இந்தியாவின் மேற்கு எல்லையோரம் உள்ள இந்திய விமானப்படை தளங்களின் செயற்கை கோள் புகைப்படங்களை எடுத்து தருமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானுடைய விண்வெளி ஆய்வு அமைப்பான SUPARCO – Space and Upper Atmosphere Research Commission அதாவது விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு கழகம் சீனாவின் CNSA Chinese National Space Agency சீன தேசிய விண்வெளி முகமையிடம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளது.
சில தகவல்களின்படி பாகிஸ்தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 22 தளங்களின் புகைப்படங்களை கோரி உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக 6 முக்கிய தளங்களின் அதிக துல்லியமான புகைப்படங்களையும் அதாவது 0.6 மீட்டர் அளவிலான புகைப்படங்களையும் கோரியுள்ளது.
பாகிஸ்தானிடம் ஒரு மீட்டருக்கும் குறைந்த பகுதிகளை புகைப்படம் எடுக்கும் செயற்கை கோள் திறன் இல்லை நீண்ட காலமாகவே வணிக ரீதியான இத்தகைய சேவைகளை பாகிஸ்தான் நாடி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI – Inter Services Intelligence இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடிக்க பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.