கடந்த 2004ஆம் ஆண்டு முப்படைகளை தவிர துணை ராணுவம் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அரசு வழங்கி வந்த ஒய்வூதியம் ரத்து செய்யப்பட்டு NPS National Pension Scheme எனும் புதிய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின்படி ஒய்வூதியத்திற்கு அரசு பணியாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையையும் பின்னர் மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையையும் பங்களிப்பு செய்து வரும் தொகை ஒய்வு பெறுகையில் வழங்கப்படும்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே துணை ராணுவ படைகளை காவல்துறை அல்லது பிற அரசு பணியாளர்களை போன்று நடத்த கூடாது எனவும் அவர்கள் இந்தியாவின் ஆயுத படைகள் ஆகையால் அவர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
தற்போது தில்லி உயர் நீதிமன்றம் ஶ்ரீனிவாஸ் ஷர்மா vs இந்திய அரசுக்கு எதிரான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் துணை ராணுவ படைகள் இந்தியாவின் ஆயுத படைகளாகும் ஆகவே அவர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும்
பழைய ஒய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுகையில் தற்போது பணியில் உள்ள வீரர்கள், தற்போது பயிற்சியில் உள்ளவர்கள், இனி தேர்வாகும் வீரர்கள் என அனைத்து துணை ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.